Thursday, 19 January 2012

எங்கு இருந்தாலும் என் கணிணி வாழ்க


நமது கணிணியை எங்கிருந்தாலும் இணையம் வழியாக பயன்படுத்தலாம். கூடவே யாருக்காவது  உதவி  தேவை  பட்டால்  அவர்கள் கணிணியை உங்கள் இடத்திலிருந்தே  இயக்கலாம் , இதற்க்கு பெயர் ரிமோட் லாகின் (Remote Login) என்பார்கள். இப்பதிவில்  இந்த ரிமோட் லாகின்  மென்பொருளை  பற்றி அறிந்துகொள்வோம்.  



இந்த ரிமோட் லாகின் நமது விண்டோஸ் இயக்கு அமைப்பிலேயே (Windows OS) இருகின்றது  அனால் எளிதாக அதை இயக்க முடியுமா என்று    சொல்வது  கடினமே. இது மட்டும் அல்லாது பல மூன்றாம் நபர் மென்பொருட்களும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக ரியல் விஎன்சி (Real VNC), டைட்   விஎன்சி (Tight VNC), டீம் வியுவர் (Team Viewer).

நாம் இப்பொழுது டீம் வியுவர்(Team Viewer) பற்றி பார்ப்போம் ஏன் என்றால் அது தான் எனக்கு தெரிந்து உபயோகிப்பதற்கு மிக எளிமையாக இருக்கிறது. 
டீம் வியுவர்ஐ தரவிறக்கம்   செய்ய http://www.teamviewer.com/download/TeamViewer_Setup_en.exe

டவ்ன்லோடிவிட்டு அதை நிறுவ வேண்டும், அதுவும் மிக எளிதாகவே இருக்கும். niruvum பொது இலவச பயன்பாட்டிற்கு நான் கமர்சியல் யூஸ் என்று தேர்ந்தெடுக்கவும்.     
பிறகு  டீம் வியுவர் இப்படி வரும். 


உங்கள் கணிணியை பிறர் இயக்கவும் உங்களுக்கு உதவுபவரிடம் கொடுக்கவும், இடது பக்கமுள்ள யுவர் ஐடி மற்றும் பாஸ்வோர்டை பயன் படுத்துங்கள். 

சரி நீங்கள் எந்த கணிணியை இயக்க வேண்டுமோ  அந்த கணினியின் ஐடியை டைப் செய்து கன்னேக்ட் பார்ட்னர் என்ற பட்டனை அழுத்துங்கள். என்ட்டர்  பாஸ்வோர்ட்  என்று கேட்கும் அந்த கணிணியின் பாஸ்வோர்ட்ம் கொடுங்கள் அடுத்து.

   அந்த கணினியின் திரை உங்கள் கணினியில் காணலாம். 


அந்த கணிணியில் இருந்து எதாவது பைல்லை தரவிறக்கம் செய்ய பைல் ட்ரான்ஸ்பர் என்ற விருப்பத்தை பயன்படுத்தவும்.   
இணையம் வழியே கணிணியை இயக்குவது அல்வா சாப்பிடுவதற்கு  சமம் என்பது தெளிவாக தெரிகிறது.

0 comments:

Post a Comment

Labels