Friday 7 December 2012

போதை பழக்கத்தை கை விட... போதைக்கு அடிமையானவர்களை மீட்டிட....

போதை மருந்துகள் பயன்படுத்துவோர் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிவதை பார்த்து இனி யாரும் அதை பற்றி நினைக்க கூட மாட்டார்கள். இதனை பகிருங்கள் பலரின் வாழ்க்கையையும் உயிரையும் காப்பாற்றுங்கள். 


இதில் போடோஷப் பயன்படுதவில்லை. உண்மையாக  நடந்த சம்பவங்களை தான் புகைப்படம் எடுத்திருகிறார்கள்.  






புகைப்படங்கள் இவர்களுடையது : http://www.dailymail.co.uk

Saturday 24 November 2012

கூகிள் க்ரோம் புக் --- இது சரிப்படும்னு நெனைக்குறீங்க?






க்ரோம்  ஓ.எஸ், ஆமாங்க கூகிள்ளுடையது . அவனுங்களும் தனி ஓ.எஸ் கடை போட்டுட்டானுங்க, மொதல்ல  ஆண்ட்ராய்ட்னு  ஒரு ஓ.எஸ் இப்போ க்ரோம் . இதுவும் லினக்ஸ்ல  மேல கட்டப்பட்டது தான், இதோட விசேஷம் என்னனா க்ரோம் உலவி (browser) மாதிரி தான் மொத்த ஓ.எஸ்உம். அதுல பழகி இருன்தீங்கனா, இத பயன்படுத்துறது ரொம்ப சுலபம். இது இனையத்துல அதிகமா செலவிடற  பயபுள்ளைங்களுக்குனு பாத்து பாத்து செஞ்சிருகானுங்க, இனைய  இணைப்பு இல்லனா இந்த நோடேபூக் பயன்பாடு ரொம்ப கம்மி.

சாம்சுங், ஏசர் போன்ற வன்பொருள் உற்பத்தியாளர்கள் செய்கிறார்கள்.வெறும் ரூபாய் 15,000 மட்டும் தான் இதோட விலை, இதனாலேயே பல பேர்க்கு இத புடிச்சிருக்கு. 



                                     

                               சரி, இத எங்க எப்படி பயன்படுத்தலாம்னு பாக்கலாமா.

1. பள்ளி மாணவர்களுக்கு நிச்சயம் இது ரொம்ப பயனுல்லதா இருக்கும். எப்படினா, இணையத்துக்கு எளிமையா சேர்ந்திடலம். இணையதுள்ள மாணவர்கள் தேவையானதை மட்டும் பார்த்து, தேவை இல்லாததை பாரேன்டஸ் கன்ட்ரோல் (parent control) மூலமா தடுக்கலாம்.
2. இதுல பெரிய முப்பரிமான விளையாட்டுகள் (3D games) விளையாட முடியாது. அதுனால மாணவர்கள் அதுல நேரத்த வீணடிக்க மாட்டாங்க.
3.  கூகிள் ஆப் ஸ்டோர்ல நெறைய மூன்றாம் நபர் மென்பொருட்கள் கெடைக்கும், ரொம்ப பயனுள்ளதாகவும் இருக்கும்.
4. எழுத்தாளர்கள், மென் பொருள் வல்லுனர்கள், வடிவமைப்பாளர்கள், இணைய ப்ளாக் எழுத்தாளர்கள் மற்றும் பயணம் செய்யும் அனைவருக்கும் இது தூக்கிக் கொண்டு செல்ல எளிதாக இருக்கும்.
5.குழந்தைகள்,சிறுவர்களுக்குஏற்றது.
சரி இதுக்கு சமமானது எதுன்னு பாத்தீங்கனா, ஆப்பிள் மாக் புக் ஏற். அது விலை மூன்றுமடங்கு அதிகம் ரூபாய் 45000. அது செய்யும் வேலையை இதுவும் செய்யும், அதே அளவு பாதுகாப்பும் உண்டு.
கடைசியாக, ஆப்பிள் பெரிய இணைய மென்பொருள் உருவாக்கவில்லை, கூகிள் தான் செய்கிறது, அதனால் கூகிள் சேவைகளை அதிகம் பயன்படுத்துவோர்க்கு  இது ஒரு வரப்ரசாதம்.     

Thursday 19 January 2012

எங்கு இருந்தாலும் என் கணிணி வாழ்க


நமது கணிணியை எங்கிருந்தாலும் இணையம் வழியாக பயன்படுத்தலாம். கூடவே யாருக்காவது  உதவி  தேவை  பட்டால்  அவர்கள் கணிணியை உங்கள் இடத்திலிருந்தே  இயக்கலாம் , இதற்க்கு பெயர் ரிமோட் லாகின் (Remote Login) என்பார்கள். இப்பதிவில்  இந்த ரிமோட் லாகின்  மென்பொருளை  பற்றி அறிந்துகொள்வோம்.  

Monday 16 January 2012

சி \சி++ மற்றும் பல கணிணி மொழிகளுக்கான இலவச தீர்வுகள் (IDE) .


இப்பொழுதுள்ள மிக முக்கியமான கணிணி மொழிகளில் சி\சி++ பலராலும் உபயோகபடுத்தப் படுகின்றது. சி++ இல் உலகின் மிகச்சிறந்த செயலிகள் (Applications) உருவாகப்பட்டிருகின்றன எடுத்துகாட்டாக, SAP, Symbian   OS , Apple ஐபாடில் சில பாகங்கள், Microsoft மொத்தமாகவும் சிலவை Visual C++லும் எழுதியது தான். முக்கியமாக நாம் விளையாடும் கேம்ஸ் சி++இல் உருவாக்கப்பட்டது தான். உலகிலுள்ள முன்னணி நிறுவங்கள் எல்லாம்
 சி++யே தேர்வு செய்கிறார்கள்.    

சி++ நிரல்கள் (Programs) உருவாக்க மொழிமாற்றி (Compiler) மற்றும் மேம்பாடு சூழல்(IDE) தேவை படும். பல இலவச மற்றும் விலையுள்ள தீர்வுகள் உள்ளன, அவற்றுள் சில.

Saturday 14 January 2012

இந்த வார மென்பொருட்கள்


நீங்கள் பார்த்த வீடியோ அல்லது முழு படங்களை சேமிக்க

   நீங்கள் யூடுபிலோ அல்லது எந்த வீடியோ தளத்திலும் பார்த் வீடியோவை சேமித்து வைக்க இந்த மென்பொருளை உபயோகப்படுத்தலாம். 

Video Cache View
தரவிறக்கம்  செய்ய http://www.nirsoft.net/utils/videocacheview.zip

 

Labels