க்ரோம் ஓ.எஸ், ஆமாங்க கூகிள்ளுடையது . அவனுங்களும் தனி ஓ.எஸ் கடை போட்டுட்டானுங்க, மொதல்ல ஆண்ட்ராய்ட்னு ஒரு ஓ.எஸ் இப்போ க்ரோம் . இதுவும் லினக்ஸ்ல மேல கட்டப்பட்டது தான், இதோட விசேஷம் என்னனா க்ரோம் உலவி (browser) மாதிரி தான் மொத்த ஓ.எஸ்உம். அதுல பழகி இருன்தீங்கனா, இத பயன்படுத்துறது ரொம்ப சுலபம். இது இனையத்துல அதிகமா செலவிடற பயபுள்ளைங்களுக்குனு பாத்து பாத்து செஞ்சிருகானுங்க, இனைய இணைப்பு இல்லனா இந்த நோடேபூக் பயன்பாடு ரொம்ப கம்மி.
சாம்சுங், ஏசர் போன்ற வன்பொருள் உற்பத்தியாளர்கள் செய்கிறார்கள்.வெறும் ரூபாய் 15,000 மட்டும் தான் இதோட விலை, இதனாலேயே பல பேர்க்கு இத புடிச்சிருக்கு.
சரி, இத எங்க எப்படி பயன்படுத்தலாம்னு பாக்கலாமா.
1. பள்ளி மாணவர்களுக்கு நிச்சயம் இது ரொம்ப பயனுல்லதா இருக்கும். எப்படினா, இணையத்துக்கு எளிமையா சேர்ந்திடலம். இணையதுள்ள மாணவர்கள் தேவையானதை மட்டும் பார்த்து, தேவை இல்லாததை பாரேன்டஸ் கன்ட்ரோல் (parent control) மூலமா தடுக்கலாம்.
2. இதுல பெரிய முப்பரிமான விளையாட்டுகள் (3D games) விளையாட முடியாது. அதுனால மாணவர்கள் அதுல நேரத்த வீணடிக்க மாட்டாங்க.
3. கூகிள் ஆப் ஸ்டோர்ல நெறைய மூன்றாம் நபர் மென்பொருட்கள் கெடைக்கும், ரொம்ப பயனுள்ளதாகவும் இருக்கும்.
4. எழுத்தாளர்கள், மென் பொருள் வல்லுனர்கள், வடிவமைப்பாளர்கள், இணைய ப்ளாக் எழுத்தாளர்கள் மற்றும் பயணம் செய்யும் அனைவருக்கும் இது தூக்கிக் கொண்டு செல்ல எளிதாக இருக்கும்.
சரி இதுக்கு சமமானது எதுன்னு பாத்தீங்கனா, ஆப்பிள் மாக் புக் ஏற். அது விலை மூன்றுமடங்கு அதிகம் ரூபாய் 45000. அது செய்யும் வேலையை இதுவும் செய்யும், அதே அளவு பாதுகாப்பும் உண்டு.
கடைசியாக, ஆப்பிள் பெரிய இணைய மென்பொருள் உருவாக்கவில்லை, கூகிள் தான் செய்கிறது, அதனால் கூகிள் சேவைகளை அதிகம் பயன்படுத்துவோர்க்கு இது ஒரு வரப்ரசாதம்.